சிறுமிக்கு பாலியல் தொல்லை | லாரியை சிறைபிடித்த பொதுமக்கள்!- வீடியோ

2018-05-16 1,139

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஓட்டுனர் போஸ்கோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ஓடைப்பள்ளத்தை சேர்ந்த ஓட்டுனர் அருண் என்ற தேவேந்திரன். இவர் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் வசித்து வருகிறார்.இந்த நிலையில் தான்வசிக்கும் பகுதியில் உள்ள சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். மேலும் இதனை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதனையறிந்த சிறுமியின் பெற்றோர் ஈரோடு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதனிடையே , ஈரோட்டில் குளத்தின் கரைகளை வெட்டி மணலை விற்பனை செய்வதாக எழுந்த புகாரினால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாநகராட்சி 17-வது வார்டில் அமைந்துள்ளது கனிராவுத்தர்குளம். இந்த குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும் என்பதை வலியுறுத்தி குளம் மீட்பு இயக்கத்தினர் தொடர்போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் அரசின் சார்பில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காததால் பொதுமக்கள் மற்றும் தன்னார்வ அமைப்பின் சார்பில் குளம் தூர்வாரப்பட்டது.

Videos similaires